கிரான் பிரதேசத்தில் கூரைவிரிப்பு வழங்கள் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்திற்குட்பட்ட முறுத்தானை
கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கான  கூரைவிரிப்புக்களை(தறப்பாள்களை) கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேரடியாக சென்று  மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தினருடன்  இணைந்து வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேசத்திற்குட்பட்ட  முறுத்தானை கிராம். கிரானிலிருந்து சுமார் 18 km தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்தான் இது.

 இங்கு வாழும் மக்கள் கால்நடை வளர்ப்பு , விவசாயம் மற்றும்  தேன் எடுத்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் இங்கு வாழ்பவர்கள் மிகவும் வறுமை யில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல மக்கள் நிரந்தர வீடுகள் இல்லாமல் ஓலைக்குடிசைகளிலும் இலுக்கு  புற்களால் வேயப்பட்ட வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றமை யும் இக்கிராமத்திற்கு செல்வதற்கான வீதிகள்கூட அழிந்து காணப்படுவதையும் பார்க்கும்போது எமது சமூகம் இன்னும் எத்தனை வருடங்கள் பின் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதனை அறிய முடியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.