சுயதொழில் முயற்சியினை ஊக்குவித்தல்

நேற்றைய தினம் 07.12.2018ம் திகதியன்று மன்னார் அடம்பன் பிரதேசத்தை சேர்த்த சுயதொழில்  முயற்சியாளர் ஒருவருக்கு அவரது தொழில் முயற்சியினை  மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான ஒரு தொகுதி  தொழில்  உபகரணங்களை வழங்கி வைத்தார் முன்னாள் வட மாகாண கிராமிய அமைச்சர் பா. டெனிஸ்வரன் அவர்கள்.


2018ம் ஆண்டுக்கான அவரது CBG நிதியில் இருந்து தொழில் துறை திணைக்களத்தின் ஊடாக மேற்படி உபகரணங்கள் மன்னார் மாவட்ட தொழில்துறை திணைக்கள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. குறித்த பயனாளி அடம்பன் பிரதேசத்தில் தனது வெல்டிங் தொழில் செய்யும்  தொழில் ஸ்தாபனத்தை  கொண்டு நடாத்தி வருவதோடு  பல சமூக நல பொது வேலைத்திட்டங்களில்  அர்ப்பணிப்போடு  சேவை செய்து வரும் ஒருவருமாவார். மேலும்  குறித்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் அவர்கள் குறித்த பயனாளியிடம்
முடியுமானவரை  அப்பகுதியில் இருக்கும் வறிய மாணவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை  செய்யுமாறு அன்பான கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.