தியேட்டரில் ரசிகர்களோடு 2.0 படம் பார்த்த ரஜினிகாந்த்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.0 படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் உள்ள திரையரங்கிற்கு தனது மனைவி மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்து ரஜினிகாந்த் இன்று படம் பார்த்தார்.


ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.0 படம், உலகம் முழுவதும் 10,000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ளது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இன்று மாலை, தனது குடும்பத்தினருடன் படம் பார்க்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் சினிமாஸுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். மனைவி லதா, பேரக் குழந்தைகளுடன் ரஜினிகாந்த் படம் பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன
Powered by Blogger.