அரசியல் கைதிகளின் விடுதலை பின்னடைவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கூட்டமைப்பினர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
குறித்த சந்திப்பு குறித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், ”பாதுகாப்பு கவுன்சிலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
எனினும், நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை நாட்டில் இல்லாத நிலையில், ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டின் அரசாங்கம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் தனக்கிருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வெகுவிரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினார்” எனத் தெரிவித்தார்.
Powered by Blogger.