விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கை, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள கட்டியெழுப்ப வேண்டுமென அவர் உரையாற்றியிருந்தார். இது தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அவரை வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வுப்பிரிவினர் அழைத்திருந்தனர். வாக்குமூலம் பெறப்பட்டதையடுத்துஇ அவர் கைது செய்யப்பட்டு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Vijayakala
Powered by Blogger.