மத்திய வங்கி ஆளுநருடனான சந்திப்பிற்கு அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் மத்திய வங்கி ஆளுநருடனான சந்திப்பிற்கு அமெரிக்க தூதுவர் அலைனா டிப்லிட்சிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்த அமெரிக்க தூதுவரின் கருத்து தவறானது என சுட்டிக்காட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்க தூதுவரின் கருத்தின் அடிப்படையில், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சில தவறான தகவல்கள் அமெரிக்க தூதுவருக்கு சென்றடைந்திருப்பதாக தெரியவருகிறது.
கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம் செய்திருந்த தூதுவர் அங்கு ஊடகங்களிடம் தெரிவித்திருந்த கருத்துக்கள் தவறானவை.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் ரூபாயின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுற்றுலா பயணிகளின் வருகையை குறைவடையச் செய்து பொருளாதார நெருக்கடியை தீவிரமடையச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ரணில் விக்ரமசிங்க நிர்வாக பொறுப்பில் இருந்த காலகட்டத்திலேயே இந்த பிரச்சினைகள் காணப்பட்டது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.