சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தம்மிடம் எப்போதுமே இருப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.


அத்துடன் அதுதொடர்பில் யாரும் வீணாக குழம்பிக்கொள்ளத் தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

சிக்கிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று காலை இடம்பெற்றபோது அவர்களுடன் பேசிய மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

”நீதிமன்ற தீர்ப்பை ஒருபோதும் அவமதிக்காமல் நாங்கள் செயற்பட வேண்டும். இதில் யாரும் குழம்பிக் கொள்ள தேவையில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.

நேற்றைய தீர்ப்பை ஆட்சேபித்து இன்று உயர்நீதிமன்றத்தில் நாங்கள் மேன்முறையீடு செய்கிறோம். ஆட்சி அல்ல தேர்தல் ஒன்றே எங்களின் உடனடித் தேவை. எங்கள் பயணம் தொடரும்.” என்றார்.

இன்றைய தினம் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவின் மனுத்தாக்கலும் இடம்பெறுவதால் கொழும்பு பரபரப்பாகிக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo  #Mahinda #Maithiri
Powered by Blogger.