கண்ணுச்சாமி தண்ணிச்சாமியான கதை!

- த.இனியவன்-
விடுதலையென்பது தேசியம் சார்ந்து மட்டும் பேசுவதில்லை சமூகம் சார்ந்தும் சிந்திப்பதேயாகும் அன்று பாரதி வெள்ளையனை எதிர்த்து பாரதம் பாட பாரதி தாசன் சமூகக் களை பிடுங்கி சமூகம் பற்றிப் பேசினான்


சிங்களனை எதிர்க்கிறோம் ஏன்
 சமூகச் சீர ழிவை ஏற்படுத்துவோரை எதிர்ப்பதில்லை அச்சமோ சலுகைகளோ தெரியவில்லை

சரி விடையத்துக்கு வருவோம் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் கண்ணுச்சாமி இவன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவன் பௌத்தத்தில் பெரிதும் ஈடுபாடற்றவன்

சக்தியை மட்டும் நம்பி பிறக்ட்றிக் நோர்த் கண்டி மீது படையெடுப்புச் செய்தான் அதனால் தோல்வியடைந்தான்

அதன்பின் ஆளுநர் றொபேர்ட் பிறவுன்றிக் சக்தியுடன் புக்தியையும் பயன்படுத்தி ஜோன்டொயிலி என்ற உளவு வீரனைக் கண்டிக்கு அனுப்புகின்றான் அந்த வீரன் கண்ணுச் சாமியுடன் நட்பாகி வெளிநாட்டு உயர்ரக மதுபானங்களுக்கு கண்ணுச்சாமியை அடிமையாக்கு கின்றான் கண்ணுச்சாமி தண்ணிச்சாமியாகி பௌத்த நெறி முறைகளை மதிக்காது மிதிக்கத் தொடங்கினான் இதனால் பிரதானிகளும் பிக்குகளும் மக்களும் கண்ணுச்சாமி மீது வெறுப்பிலிருந்தனர்

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி1815ஆம் ஆண்டு மக்கள் பிக்கு பிரதானிகளின் துணையோடு றொபேர்ட் பிறவுன்றிக் கண்டி ராச்சியத்தைக் கைப்பற்றினான்

இதற்குத் தேவையானது பிரித்தாளும் தந்திரம் என்ற நெப்புப் பந்தம் அதற்கு ஊற்றிய எண்ணை மதுபானம் ஊற்றிய கறுத்தாடு ஜோன்டொயிலி ஊற்ற வைத்த தலைமையாடு  றொபேர்ட் பிறவுன்றிக் மாட்டியது மத சமூகப் பற்றற்ற கண்ணுச்சாமி

சரி இதற்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு

அண்மையில் கஞ்சா கடத்தியோரை பொலிஸ்மா அதிபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீட்டார் சுமந்திரன் என்பது பத்திரிகைச் செய்தி மட்டுமன்றிபாராளுமன்றத்திலும் பேசப்பட்டது அப்படியென்றால்

அன்றைய கண்டிராச்சிய இழப்புப் போல வடபகுதி மக்களின் இருப்பைப் பறிக்கும் கறுப்பாடாக சுமந்திரன் செயற்படுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது

புரட்சி முனையை அழித்த கயவர்கர் புண்படுத்தல் முனையைக் கொண்டு அழிக்க கஞ்சாவைப் பயன்படுத்துகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது

இந்தியர்கள் எம்மை அழிப்பதற்கு பார்த்தீனியத்தைப் பரப்பியது போல் தற்போது திட்டமிட்டுக் கஞ்சா பரப்பப் படுகின்றது இந்த விடையத்தில் அரசியல்வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டாமா

தாம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லையென்றால் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவையும் சுமந்திரனைச் சார்ந்ததல்லவா

சீர்த்தி சிறீ விக்கிரம ராஜ சிங்கனும் தன்மக்களுக்கான மதவிழுமியத்தைப் பின்பற்றாதவர் வெள்ளையனுடன் ஒட்டி உறவாடியவர்
சுமந்திரனும் அமெரிக்க கத்தோலிக்க மிசனரிகளின்முக்கிய அங்கத்தவராயிருந்து உறவாடுபவர்
கண்ணுச்சாமியும் தண்ணியோடு சம்பந்தப்பட்டவர்
இந்ந்தச்சாமியும் கஞ்சாவோடு தொடர்பு பட்டவர்
கண்ணுச்சாமியும் கடைசியில் தானும் அழிந்து மக்களைப் பறிகொடுத்தவர்
இந்தச் சாமியும் இறுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்து மக்களை பாதாளத்துள் தள்ளப் போகிறார்

அதற்காகவெல்லாம் சுமந்திரனை மன்னனாக்கவில்லை

சுமந்திரன் என்பவர்
மெலே சொன்ன
கறுப்பாடா
நெருப்புப் பந்தமா
எண்ணையா
சாத்தானா
பிரித்தாளும் தந்திரமா
என்பதை நீங்களே முடிவெடுங்கள் என் மக்காள்

'கஞ்சாவிலிருந்து மீண்டு
அஞ்சாமை பற்றி யாண்டு
நெஞ்சாற என்றும் வாழ்வோம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.