பிள்­ளை­யா­னு­டன் இணைந்தே பர­ரா­ஜ­சிங்­கத்தை கொன்­றோம் ! எதி­ரி­க­ளின் வாக்­கு­மூ­லத்தை ஏற்­றது மன்று.

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம்
என முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­கள் வழங்­கிய குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம் நேற்று ஏற்­றுக் கொண்­டது.

வழக்­கின் எதி­ரி­க­ளில் ஒரு­வ­ரான பிள்­ளை­யான் (சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன்) ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கம் கொலை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்று எதி­ரி­க­ளின் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர். அத்­து­டன், பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 எதி­ரி­க­ளுக்­கும் எதி­ரான வழக்கை மேற்­கொண்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அனு­ம­தி­ய­ளித்த மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.வை.எம்.இஸர்­தீன், வழக்கை பெப்­ர­வரி 21, 22ஆம் திக­தி­க­ளுக்கு ஒத்­தி­வைத்­தார்.
முன்­னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான பிர­தீப் மாஸ்­டர் என அழைக்­கப்­ப­டும் எட்­வின் சில்வா கிருஸ்­ணா­னந்­த­ராஜா, கஜன் மாமா என அழைக்­கப்­ப­டும் ரெங்­க­சாமி கன­க­நா­ய­கம், பிள்­ளை­யான் என அழைக்­கப்­ப­டும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன், இரா­ணுவ புல­னாய்­வில் பணி­யாற்­றிய மீரா­லெப்பை கலீல் உள்­ளிட்ட ஆறு பேர் மீது 11 குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்டு வழக்கு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இந்த வழக்கு மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.வை.எம்.இஸர்­தீன் முன்­னி­லை­யில் நேற்­றுப் புதன்­கி­ழமை விசா­ர­ணைக்கு வந்­தது.

எதி­ரி­கள் ஆறு பேரும் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­க­ளால் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில், பிள்­ளை­யான் உள்­ளிட்ட ஏனைய நால்­வ­ரு­டன் இணைந்தே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கத்தை கொலை செய்­தோம் என்று தெரி­வித்­துள்­ள­னர். அந்­தக் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் எதி­ரி­க­ளால் சுய­மாக வழங்­கப்­பட்­டது என ஏற்­றுக்­கொண்ட மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம், 6 எதி­ரி­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் மேல­திக விளக்­கத்தை முன்­னெ­டுக்­கு­மாறு வழக்­குத் தொடு­ன­ரான சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு பணித்­தது.

வழக்­குத் தொடு­னர் சார்­பில், மூத்த அரச தரப்பு சட்­டத்­த­ரணி மாதவ தென்­னக்­கோன், அரச சட்­டத்­த­ரணி நாக­ரட்­ணம் நிசாந்த் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­னர். எதி­ரி­கள் 6 பேர் சார்­பி­லும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அணில் சில்வா முன்­னி­லை­யா­னார்.

மட்­டக்­க­ளப்பு புனித மரி­யாள் பேரா­ல­யத்­தில் 2005ஆம் ஆண்டு நத்­தார் தின நள்­ளி­ரவு ஆரா­த­னை­யின்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கம் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் 2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் தமிழ் மக்­கள் விடு­த­லைப்­பு­லி­கள் கட்­சி­யின் தலை­வ­ரு­மான சிவ­நே­சத்­துரை சந்­தி­ர­காந்­தன் மற்­றும் முன்­னாள் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் பிர­தீப் மாஸ்­டர் என்­ற­ழைக்­கப்­ப­டும் எட்­வின் சில்வா கிருஸ்­ணா­னந்­த­ராஜா உள்­பட 6 பேர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.