இரசாயன ஆயுதங்களையோ கொத்துக் குண்டுகளையோ நாம் நினைத்தது கூட இல்லை.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்­தன இவ்வாறு கூறுகின்றாா்.

விடு­த­லைப் புலி­க­ளு­ட­னான இறு­திப் போரில் கொத்­துக் குண்­டு­க­ளும், இரா­சா­யன ஆயு­தங்­க­ளும் பாவிக்­கப்­பட்­டது என்று தமி­ழர் தரப்பு முன்­வைக்­கும் குற்றச்­சாட்­டில் எந்த உண்­மை­யும் இல்லை, அவ்­வாறு பாவித்­த­மைக்­கான ஆதா­ரங்­க­ளும் இல்லை.

பன்­னாட்டு விசா­ர­ணை­யின் மூலம் இதனை நிரு­பிக்க வேண்­டிய அவ­சி­யம் எமக்­கில்லை என்று தெரி­வித்­தார் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்­தன.

இர­சா­யன ஆயு­தங்­கள் சம­வாய திருத்த சட்­டம் மீதான விவா­தம் நாடா­ளு­மன்­றில் நேற்­றுப் புதன்­கி­ழமை இடம்­பெற்­ற­போது, விடு­த­லைப் புலி­க­ளு­ட­னான இறு­திப் போரில் இலங்கை இரா­ணு­வம் இர­சா­யன ஆயு­தங்­க­ளை­யும், கொத்­துக் குண்­டு­க­ளை­யும் பாவித்­தது என்று தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு குற்­றம் சுமத்­திய நிலை­யில், அதற்­குப் பதி­ல­டி­யாக இவ்­வாறு தெரி­வித்­தார் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்­கை­யில் இடம்­பெற்ற இறு­திப் போரில் இலங்கை இரா­ணு­வம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக இர­ச­யான ஆயு­தங்­க­ளை­யும் கொத்­த­ணிக் குண்­டு­க­ளை­யும் பயன்­ப­டுத்­தி­யது என்று குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்ள போதி­லும் அதனை நாம் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அவ்­வாறு எமது இரா­ணு­வம் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை நாம் கண்­டிக்­கின்­றோம்.

எமது இரா­ணு­வம் இர­சா­யன ஆயு­தங்­களை பாவித்­த­தா­கவோ அல்­லது கொத்­துக் குண்­டு­களை பாவித்­த­தா­கவோ குற்­றச்­சாட்டு மட்­டுமே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே தவிர அதற்­கான எந்த ஆதா­ர­மும் இல்லை. அதே­போல் இவற்றை நிரு­பிக்க பன்­னாட்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்­டும் என­வும் சபை­யில் இவர்­கள் குறிப்­பிட்­ட­னர். பன்­னாட்டு விசா­ர­ணையை முன்­னெ­டுக்க எந்­தத் தேவை­யும் இல்லை. இலங்­கை­யில் விசா­ர­ணை­களை நடத்தி உண்­மை­களை நிரு­பிக்க முடி­யும். மாறாக பன்­னாட்டு விசா­ர­ணைக்கு  முகங்­கொ­டுத்து எம்மை நிரூ­பிக்க வேண்­டிய எந்­தத் தேவை­யும் இல்லை.

அர­சி­யல் வாதி­கள் சிலர் தமது அர­சி­யல் சுய­ந­லன்­க­ளுக்­காக இவ்­வா­றான மோச­மான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­ற­னர். நாம் ஒன்­றாக இணைந்து பய­ணிக்க வேண்­டும் என்ற முயற்­சி­களை எடுத்து வரு­கின்ற நிலை­யில் ஒரு சிலர் இவ்­வாறு பொய்­யான கருத்­துக்­களை முன்­வைப்­ப­தன் மூல­மாக நாட்­டின் ஒற்­றுமை சீர­ழி­வ­து­டன் வேறு பல பிரச்­சி­னை­க­ளும் உரு­வா­கும். ஆகவே இவ்­வாறு பொய்­யான கருத்­துக்­களை முன்­வைப்­பதை தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும். அண்­மை­யில் வடக்­கில் ஏற்­பட்ட இட­ரின் போதும் எமது இரா­ணு­வமே வடக்கு மக்­களை காப்­பாற்­றும் நட­வ­டிக்­கையை எடுத்­தது. ஆனா­லும் விக்­கி­னேஸ்­வ­ரன் போன்­ற­வர்­கள் அத­னை­யும் குறை­யா­கவே கூறு­கின்­ற­னர். வடக்­கில் இன­வாத அடிப்­ப­டை­வாத கொள்­கை­யில் உள்ள விக்­னேஸ்­வ­ரன் போன்ற ஒரு சிலரே தவ­றான கருத்­துக்­களை கூறு­கின்­ற­னர்.

அதே­போல் நாம் பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் அடி­ப­ணிந்­துள்­ள­தாக எதிர்க்­கட்சி கூறு­கின்­றது. எமது அரசு பன்­னாட்­டுத் தரப்­பு­டன் நாடு­க­ளு­டன் இணைந்து பய­ணிக்­கும் ஆரோக்­கி­ய­மான நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு நாம் அடி­ப­ணிந்து செயற்­பட வேண்­டிய எந்­தத் தேவை­யும் இல்லை. நாம் இலங்­கை­யைப் பாது­காக்­கும் கொள்­கை­யில் இருந்தே செயற்­பட்டு வரு­கின்­றோம் – என்­றார்.

அட.........நம்ம வெள்ளைவேட்டிக்காரங்கள் கதைச்சிருக்கிறாங்க ...... ஏதோ புரிந்துவிட்டது  போல.....
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.