இலங்­கைக்கு இமா­லய பொரு­ளா­தா­ரச் சிக்­கல்! ரணில் ஐயா கூறுகின்றாா்.

இந்த ஆண்டு இலங்கை பெரும் பொரு­ளா­தார நெருக் ­க­டி­யைச் சந்­திக்க வேண்­டி­யுள்­ளது. 2019ஆம் ஆண்­டில் வெளி­நாட்­டுக் கடன் மற் ­றும் வட்­டி­யாக 5 ஆயி­ரத்து 900 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ளை­யும், இலங்கை வர­லாற்­றில் பெரும் கடன் தவ­ணை­யாக ஜன­வரி 14ஆம் திக­தி­யில் இருந்து 2 ஆயி­ரத்து 600 அமெ­ரிக்க டொலர்­க­ளை­யும் செலுத்­தியே ஆக­வேண்­டிய நிர்­பந்­தம் இலங்­கைக்கு உள்­ளது என்று தெரி­வித்­தார் தலைமை அமைச்­சர் ரணில்.

நாடா­ளு­மன்­றில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார் அவர்.

நிதி நெருக்­க­டியை சமா­ளிக்க இந்­திய மத்­திய வங்கி 400 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ளை­யும், சீன பண்டா பிணை­முறி மற்­றும் ஜப்­பான் சமூ­ராய் பிணை­முறி மூல­மாக 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ளை­யும், பன்­னாட்டு நாணய நிதி­யம் மூலம் ஒரு பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­க­ளை­யும் பெற்­றுக்­கொள்ள எதிர்­பார்­கின்­றோம். அடுத்த வாரம் வொஷிங்­ட­னில் பேச்­சுக்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளோம்.

அர­சி­யல், சமூக பொரு­ளா­தார சவால்­கள் எம்­முன்­பாக இருக்­கின்­றன. 2015ஆம் ஆண்­டில் நாம் நாட்டை பொறுப்­பேற்­கை­யில் முழு நாடும் பெரிய கடன் பொறி­யில் சிக்­கி­யி­ருந்­தது. கடன் சுமை­யில் இருந்து தந்­தி­ரோ­பா­ய­மாக மீள்­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தோம். கடன் நெருக்­க­டி­யில் எமது நாட்­டின் துறை­மு­கங்­கள், வானூர்தி நிலை­யங்­கள் கைப்­பற்­றப்­ப­டும் சூழ்ச்­சி­யில் இருந்து நாம் எம்மை விடு­வித்­துக்­கொண்­டோம்.

பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் பொரு­ளா­தா­ரத்தை நிலை­யான இடத்­துக்கு உயர்த்தி வைக்க நட­வ­டிக்கை எடுத்­தோம். எனி­னும் இந்த ஆண்டு பொரு­ளா­தார ரீதி­யில் எமது நாடு பெரி­ய­தொரு நெருக்­க­டி­யைச் சந்­திக்­க­வேண்­டிய நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த வரு­டத்­தில் பொரு­ளா­தார துறை­யில் பெரிய சவால் காத்­தி­ருக்­கி­றது.

அதிக கடன் தொகை­யை­யும் இந்த வரு­டத்­தில் செலுத்த வேண்­டி­யுள்­ளது. 2019ஆம் ஆண்­டில் வெளி­நாட்டு கடன் மற்­றும் வட்­டி­யாக 5 ஆயி­ரத்து 900 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் செலுத் வேண்­டும். இலங்கை வர­லாற்­றில் பெரிய கடன் தவ­ணை­யாக ஜன­வரி 14ஆம் திக­தி­யில் இருந்து 2 ஆயி­ரத்து 600 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இந்த கடன்­கள் எவை­யும் நாம் பெற்­று­கொண்­ட­தல்ல. கடந்த ஆட்­சி­யில் பெறப்­பட்ட கடன்­களே இவை­யா­கும். கடந்த கால கடன்­களை செலுத்­தும் போது பொது­மக்­க­ளுக்கு சுமை ஏற்­ப­டாத வகை­யில் மீளச் செலுத்­து­வ­தற்­கான திட்­ட­மொன்றை தயா­ரித்­தி­ருந்­தோம்.

உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­தல், ஏற்­று­மதி பொரு­ளா­தா­ரத்­தைப் பலப்­ப­டுத்­து­தல், வெளி­நாட்டு முத­லீட்டை அதி­க­ரித்­தல் போன்ற திட்­டங்­களை நாம் செயற்­ப­டுத்­தி­யி­ருந்­தோம். கடந்த வரு­டத்­தில் பன்­னாட்­டுப் பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­பட்ட சில மாற்­றங்­கள் கார­ண­மாக ரூபா­வின் பெறு­மதி வீழ்ச்­சி­ய­டைந்­தது. ரூபா­வின் பெறு­ம­தியை பேணு­வ­தற்­கான நாம் மூலோ­பா­யங்­கள் குறித்­தும் கவ­னம் செலுத்­தி­யி­ருந்­தோம்.

ஆனால் ஒக்­டோ­பர் 26 ஆம் திகதி ஏற்­பட்ட அர­சி­யல் குழப்ப நிலை கார­ண­மாக சகல நட­வ­டிக்­கை­க­ளும் தடைப்­பட்­டன. 51 நாள்­கள் நீடித்த அர­சி­யல் உறு­தி­யற்ற நிலை­யால் எமது பொரு­ளா­தா­ரத்­தின் மீது பெரும் இடி விழுந்­தது. பொரு­ளா­தார வளர்ச்சி வீதம் தடைப்­பட்­டது. ரூபா­வின் பெறு­மதி மேலும் குறை­வ­டைந்­தது. இந்­தக் காலப்­ப­கு­தி­யில் எந்த நாட்­டி­ட­மி­ருந்தோ பன்­னாட்டு நிதி நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்தோ கடனோ உத­வியோ பெற இலங்­கைக்கு முடி­ய­வில்லை.

இந்­தக் காலப்­ப­கு­தி­யின் அர­சின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள், கருத்­திட்­டங்­கள் தடைப்­பட்­டன. இந்­தக் காலப்­ப­கு­தி­யில் பொரு­ளா­தா­ரத்­துக்கு ஏற்­பட்ட சேதத்தை ஒரே­ய­டி­யா­கக் காண முடி­யாது. இத­னால் நாட்­டின் எதிர்­கால பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு பாதிப்பு ஏற்­ப­டும். 51 நாள்­க­ளில் இழந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை மீள கட்­டி­யொ­ழுப்­பு­வ­தற்கு கால அவ­கா­சம் தேவைப்­ப­டும். முத­லீட்­டா­ளர்­க­ளின் நம்­பிக்­கையை இழக்க நேரிட்­டது.

அவர்­க­ளின் நம்­பிக்­கையை மீள கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும். நாட்­டில் அர­சி­யல் உறுதி நிலமை காணப்­ப­டு­வ­தாக பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு காண்­பிக்க வேண்­டும். பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் குறிப்­பாக முத­லீட்­டா­ளர்­க­ளின் நம்­பிக்­கையை மீள கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும். இலங்­கை­யின் சுற்­று­லாத் துறை உய­ரிய இடத்­தில் இருந்த நேரத்­தில்­தான் இலங்­கை­யில் அர­சி­யல் நெருக்­கடி ஏற்­பட்­டது.

இத­னால் சில நாடு­கள் சுற்­றுலா துறைக்கு பொருத்­தம் இல்­லாத நாடாக எமது நாட்­டைப் பெய­ரிட்­ட­னர். சுற்­று­லாத் துறை­யும் பாதிக்­கப்­பட்­டது. பலர் இலங்­கைக்­கான பய­ணத்­ததை கைவிட்­டி­ருந்­தார்­கள். 51 நாள்­க­ளில் ரூபா­வின் பெறு­மதி 3.8 வீதத்­தி­னால் வீழ்ச்­சி­ய­டைந்­தது. வெளி­நாட்­டுக் கையி­ருப்பு 7 ஆயி­ரத்து 991.5 மில்­லி­யன் டொல­ரில் இருந்து 6 ஆயி­ரத்து 985.4 மில்­லி­யன்­க­ளாக வீழ்ச்­சி­ய­டைந்­தது.

ரூபா­வின் பெறு­மதி குறை­வ­டைந்­த­தால் நாட்­டுக்கு கொண்­டு­வ­ரும் மூலப்­பொ­ருள்­க­ளின் விலை­கள் உய­ரும். இத­னால் உற்­பத்தி செல­வும் அதி­க­ரிக்­கும். இதனை முகா­மைத்­து­வம் செய்து ஒக்­டோ­பர் 26ஆம் திக­திக்கு முன்­பி­ருந்­ததை விட சிறந்த நிலைக்கு நாட்டை மீள உயர்த்­து­வது எமக்கு பொறுப்­பா­கும். வாழ்க்­கைச் செலவை குறைத்து மக்­கள் வாழக்­கூ­டிய வகை­யி­லான சூழலை உரு­வாக்­க­வும் இருக்­கி­றோம்.

எமது நாட்­டின் ரூபா­வின் விலையை நிலை­யா­ன­தாக மாற்­றவே நாம் முயற்­சித்து வரு­கின்­றோம். அதற்­காக நாடு­கள் பல­வற்­று­டன் நாம் பேச்சு நடத்தி வரு­கின்­றோம். அவற்­றில் சில நாடு­கள் எமக்கு உதவி செய்ய இணக்­கம் தெரி­வித்­துள்­ளன. இந்­திய மத்­திய வங்கி 400 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் கடனை இலங்கை மதிய வங்­கிக்கு வழங்க இணக்­கம் தெரி­வித்­துள்­ளது.

அதே­போல் மேலும் நிதியை பெற்­றுக்­கொள்ள இந்­தி­யா­வு­டன் பேச்சு நடத்தி வரு­கின்­றோம். சீன பண்டா பிணை­முறி மற்­றும் ஜப்­பான் சமூ­ராய் பிணை­முறி மூல­மாக 500 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் பெற்­றுக்­கொள்ள எதிர்­பார்­கின்­றோம். அதே­போல் பன்­னாட்டு நாணய நிதி­யம் மூலம் ஒரு பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­களை பெற்­றுக்­கொள்ள எதிர்­பார்­கின்­றோம். ஆகவே வெகு விரை­வில் ரூபா­வின் விலையை உறு­திப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையை நாம் முன்­னெ­டுக்­க­வுள்­ளோம்.

சுற்­றுலா துறை­யில் துரித வளர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்­கும் நாம் எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம். தொழில் பேட்­டை­களை முன்­னெ­டுக்­க­வும் நாம் தீர்­மா­னித்­துள்­ளோம் – என்­றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.