மகிந்த, மைத்திரி வடமாகாணத்தில் பிறந்திருந்தால் தெரிந்திருக்கும். !
நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது,
பயங்கரவாதத் தடைச்சட்டதின் கீழ் வடக்கு கிழக்கில் கைதுசெய்யப்பட்டு பலவருடகாலமாக பல தமிழர்கள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். தற்போது இவ்வாறு 103 பேர் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் சாட்சியங்களின்றி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இது பன்னாட்டுச் சட்டத்துக்கு முரணானதுடன், இவர்கள் அனைவரும், வடக்கு – கிழக்கில் பிறந்த குற்றத்துக்காகச் சூழ்நிலை கைதிகளானவர்கள். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவோ முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவோ வடக்கில் பிறந்திருந்தால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்று சிறைகளிலேயே வாடிக்கொண்டிருந்திருப்பர்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட திடீர் ஆட்சிமாற்றத்தின் போது சிறைச்சாலைகளுக்குச் சென்ற நாமல் ராஜபக்சவும், மூன்று பிரதி அமைச்சர்களும். தமிழ் அரசியல் கைதிகளிடம், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்க வேண்டாமென கூறுங்கள்.
நாங்கள் ஆட்சிபீடம் ஏறியதும் உங்களை உடனடியாக விடுப்போம்’ எனக் கூறியுள்ளனர். அவ்வாறு விடுவிக்க முடியுமானால் இப்போது ஏன் விடுவிக்க முடியாது?. இதேவேளை, புதிய அரசியலமைப்பு திருத்தம் வராது என மக்களை திசைதிருப்பும் முயற்சியில் சிலர் இனவாதக் கருத்துகளை பரப்பிவருகின்றனர் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை