நள்ளிரவில் கொள்ளை!

கிளி­நொச்சி அக்­க­ரா­யன் பகு­தி­யில் பல லட்­சம் ரூபா பணம், துப்­பாக்கி முனை­யில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் நேற்று அதி­காலை இடம்­பெற்­றுள்­ளது.


முறைப்­பாடு மேற்­கொண்ட வீட்டு உரி­மை­யா­ளர், வங்­கி­யி­லி­ருந்து 2 லட்­சம் ரூபா பணத்தை நேற்­று­முன்­தி­னம் எடுத்து வந்­துள்­ளார். இந்த நிலை­யி­லேயே அவ­ரது வீட்­டுக்­குள் நேற்று அதி­காலை 1 மணி­ய­ள­வில் கொள்­ளை­யர்­கள் புகுந்­துள்­ள­னர். வங்­கி­யில் எடுத்த பணம் எங்கே என்று கொள்­ளை­யர்­கள் மிரட்­டி­ய­தாக வீட்டு உரி­மை­யா­ளர் பொலிஸ் முறைப்­பாட்­டில் தெரி­வித்­துள்­ளார்.

‘வீட்­டின் முகப்­புப் பகு­தி­யில் உரி­மை­யா­ள­ரின் தாய் படுத்­தி­ருந்­துள்­ளார். அவரை மிரட்­டிய கொள்­ளை­யர்­கள், அவர் ஊடாக வீட்­டுக் கத­வைத் திறக்­கச் செய்­துள்­ள­னர். வீட்­டி­னுள் முகங்­களை மூடிக்­கட்­டி­ய­வாறு நுழைந்த 4 கொள்­ளை­யர்­கள், கைத்­துப்­பாக்­கி­யைக் காட்­டி­யுள்­ள­னர்.

வீட்­டின் உரி­மை­யா­ளர் மீது தாக்­கி­யுள்­ள­னர். அவர்­களை வாள்­மு­னை­யில் கைக­ளைக் கட்டி இருத்­திய பின்­னர் தேடு­தல் வேட்டை நடத்தி கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர்.

வீட்­டில் இருந்த 12 பவுண் நகை­க­ளைக் கொள்­ளை­யிட்ட பின்­னர் வீட்டு உரி­மை­யா­ள­ரி­டம், வங்­கி­யில் இன்று (நேற்­று­முன்­தி­னம்) எடுத்த பணம் எங்கே என்று கேட்டு மிரட்­டி­யுள்­ள­னர். அந்­தப் பணம் வைத்­தி­ருந்த இடத்தை உரி­மை­யா­ளர் காண்­பித்­துள்­ளார். அத­னை­யும் கொள்­ளை­ய­டித்­துள்­ள­னர்.

3 அலை­பே­சி­கள், ஒரு உந்­து­ருளி என்­ப­வற்­றை­யும் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்த மற்­றைய உந்­து­ரு­ளி­யின் சில்லை சேத­மாக்­கி­யுள்­ள­னர். சுமார் ஒன்­றரை மணி­நே­ரம் அந்த வீட்­டில் கொள்­ளை­யர்­கள் தங்கி நின்­றுள்­ள­னர்’ என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இதே­வேளை, வங்­கி­யில் பணம் எடுத்­துச் செல்­ப­வர்­க­ளின் வீடு­கள் குறி­வைக்­கப்­பட்டு கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட மூன்­றா­வது சம்­ப­வ­மாக இது பதி­வா­கி­யுள்­ள­தாக கிளி­நொச்­சிப் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


No comments

Powered by Blogger.