தாயக வேள்வியில் தம்மை ஆகுதி ஆக்கிய வீரமரவர்களின் வேர்களை நாம் இன்று உயிர்ப்பித்தோம்!

பத்தாண்டு காலமாய் பெற்றவளுக்கு நிகரான பெருந்தலைவன் வழிகாட்டலையும் அரவணைப்பினையும் தவரவிட்ட ஈழத்தின் முதல்மரியாதைக்குறிய மாவீரர்களின் பெற்றோர் உயிர்த்துடையோருக்கு இன்று நாம் பொங்கல் உதவிகளை வழங்கி இருந்தோம்.


போரின் பின்னரான இத்தனை ஆண்டுகாலங்களில் எவரொருவரும் மாவீரர் குடும்பங்களுக்கு இதுவரையில் பெருநாள் பரிசுப்பொதிகளை வழங்கியிருக்கவில்லை. பலர் மறந்தும் போனார்கள். உக்கிரமான சண்டை இடம்பெற்ற காலங்களில் கூட தமிழீழ தேசியத்தலைவர் மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம் ஊடாக ஒவ்வொரு பொங்கல் தினத்திற்கும் தவறாது  பொங்கல் பொதியினை மாவீரர் போராளிகள் குடும்பத்தினருக்கு வழங்கியே வந்திருந்தார். பட்டாசுகளுக்குப்பதிலாக யுத்த ஓசையினை கேட்டுக்கொண்டே பொங்கலோ பொங்கல் என பொங்கல் கொண்டாடியவர்கள் நாம்.

பத்தாண்டுகளுக்கு மேலாக பொங்கல் உதவிகளை எவரிடம் இருந்தும் மாவீரர் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டதில்லை. அதை வழங்கிவைக்க எவரும் முன்வரவும் இல்லை. இதனை உணர்ந்த நாம் அதனை மாற்ற அணிதிரண்டோம் எம்மால் முடிந்த அளவுக்கு இன்று 103 மாவீரர் குடும்பங்களுக்கு பொங்கல் உதவிகளை வழங்கியிருந்தோம். அதனைப்பெற்றுக்கொண்டவர்கள் கூறிய வார்த்தைகளே பத்தாண்டுகளாய் தாம் பொங்கல் பரிசினை எவரிடமிருந்தும் பெறவில்லை எல்லாம் அவரோடு முடிந்துபோனது என்றனர்.

எனினும் எதுவும் முடிந்துபோகவில்லை. முகநூல் ஊடாக ஒன்றினைந்த நண்பர்கள் நாம் தலைமகனை தவறவிட்ட அவ் உறவுகளுக்கு தேடிச்சென்று கரம் கொடுத்தோம்.கிளிநொச்சி முல்லைத்தீவினைச்சேர்ந்த 103 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசினை நாம் #முகநூல்_நண்பர்கள் குழுமத்தின் ஊடாக வழங்கிவைத்திருந்தோம் அதற்கான செலவு விபரத்தினை இணைத்துள்ளோம் உங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வாருங்கள்.

இன்றைய 103 மாவீரர் குடும்பங்களுக்குமான உதவிகளை வழங்க புலம்பெயர் உறவுகள் நிதி அளித்திருந்தனர். நாளையும் நாம் இதனை தொடர்வதா என்பது உங்கள் கையில்....நீங்கள் உதவ முன்வந்தால் நாம் தொடர்வோம். தைப் பொங்கலை எமக்காய் உயிர்த்தியாகம் செய்த மாவீரர் குடும்பங்களோடு கொண்டாடுவோம் வாருங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.