புரொமோஷனில் இறங்கிய சாயிஷா

படங்களின் புரொமோஷனுக்காக ட்ரெய்லர், டீசர் வெளியிடுவது போல புதிய பாடலை உருவாக்கி வெளியிடுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. தற்போது படத்தில் நடிக்காத நடிகர், நடிகைகளும் புரொமோஷன் பாடலுக்காக ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் வாட்ச் மேன். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் புரொமோஷன் பாடலுக்காக சாயிஷா நடனமாடியுள்ளார்.
பாடல் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “விஜய் அண்ணாவின் புதிய படத்துக்காக ஒரு பாடலில் நடனமாடியுள்ளேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். சாயிஷா ஏற்கெனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தின் மூலமே தமிழில் அவர் அறிமுகமானார். தற்போது அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வாட்ச் மேன் படத்துக்கு நிரவ் ஷா, சரவணன் ராமசாமி இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண்மொழி பிரகாசம் தயாரிக்கிறார்.
Powered by Blogger.