ஈழதேசத்தின் புங்குடுதீவு அபிவிருத்தி செய்ய முன்வர வேண்கோள்!

ஈழதேசத்தின் புங்குடுதீவு மண்ணின் மைந்தர்கள் பெருந்திரளாக புலம்பெயர்ந்து

வெளிநாடுகளில் மிகவும் சிறப்பாக வாழ்ந்துவருவது யாவரும் அறிந்த உண்மை ... அனேகமானர்கள் பிறந்த மண்ணை மறந்த சூழலிலும் தாம் வாழும் நாடுகளில் நமது கலை கலாச்சாரங்களை பேணிப்பாதுகாக்கும் நிலையினைக்காணக்கூடியதாகவுள்ளது...அதேபோல் பலர் ஊரில் தமது பகுதிகளை மாத்திரம் அபிவிருத்தி செய்யும் நோக்கில் செயற்படுவதையும் அவதானிக்கமுடிகின்றது... தற்போதைய சிறப்பான செயற்பாடு எதுவெனில் வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்துவது அதாவது புங்குடுதீவின் அபிவிருத்தியின் உச்சக்கட்டம்... கீழே உள்ள புகைப்படங்கள் அண்மையில் புங்குடுதீவில் எடுக்கப்பட்டவை பன்னிரண்டு வட்டாரங்களைக்கொண்ட புங்குடுதீவில் குறிப்பிட்ட சில வட்டாரங்களைத்தவிர ஏனைய வட்டாரங்கள் எந்தவித அபிவிருத்தியும் இன்றியே காணப்படுகின்றன வசதிபடைத்தவர்கள் தமது பகுதிகளை மாத்திரமே அபிவிருத்தி செய்யும் குறிக்கோளில் செயற்படுவது மனநிலையில் இருப்பது பெரும் சோகமே ... இன்நிலை மாறவேண்டும் நாம் பிறந்தமண், எங்கள் ஊர் புங்குடுதீவு எனும் நன்நிலை தோண்றினால் இன்நிலை மாறும் ஒட்டுமொத்த புங்குடுதீவே நல் அபிவிருத்தி காணும் யாவரும் நலமாக வாழ நல்வழி பிறக்கும் ...இது உங்கள் கவனத்திற்கு!!!

அன்புடன் ஈசன் சரண்.

No comments

Powered by Blogger.