வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து!

வவுனியா ஓமந்தையில் நேற்று இரவு  இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓமந்தை நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு உணவருந்திவிட்டு வீதியை கடக்க முற்பட்ட முதியவரை வவுனியாவிலிருந்து சென்ற கப்ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதன் காரணமாக தலையில் பலத்த அடிபட்டமையின் காரணமாக முதியவரை அங்கிருந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வாகனம் செலுத்திய சாரதியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த வாகனத்தையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo
Powered by Blogger.