அரச தலை­வர் வேட்­பா­ளர்!! – ராஜபக்ச குடும்பத்திலிருந்தே!

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் அரச தலை­வர் வேட்­பா­ளர் ராஜ­பக்­ச­வின் குடும்­பத்­தி­லி­ருந்தே தெரிவு செய்­யப்­ப­டு­வார். அவர் யார் என்று இப்­போ­தைக்­குக் கூற மாட்­டோம். அவ­ரின் பெய­ரைப் பொருத்­த­மான நேரத்­தில் அறி­விப்­போம்.


இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் அம்­பாந்­தோட்டை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

‘அரச தலை­வர் தேர்­தல் வேட்­பா­ளர் விவ­கா­ரத்­தில் சிறி­லங்கா சுதந்­தி­ர­கக் கட்­சி­யைப் பங்­கா­ளிக் கட்­சி­யா­கக் கொண்­டுள்ள ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்­குள் குழப்­பம் ஏற்­பட்­டால் ராஜ­பக்ச குடும்­பத்­தைச் சேர்ந்த அரச தலை­வர் வேட்­பா­ளர் தாமரை மொட்­டுச் சின்­னத்­தில் (சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி) போட்­டி­யி­டு­வார்’ என­வும் அவர் குறிப்­பிட்­டார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் மற்­றும் மாகாண சபைத் தேர்­தல் ஆகி­ய­வற்­றுக்கு முன் அரச தலை­வர் தேர்­தல் நடை­பெ­று­வ­தற்­கு­ரிய வாய்ப்­பு­கள் அதி­க­மாக உள்­ளன. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் அத­னையே விரும்­பு­கின்­றார் போல் தென்­ப­டு­கின்­றது.

எனி­னும், அரச தலை­வர் தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டால் இரு பிர­தான கட்­சி­க­ளுக்­குள்­ளும் வேட்­பா­ளர் தெரி­வின்­போது குழப்­பங்­கள் ஏற்­ப­டக்­கூ­டும்.
வேட்­பா­ளர் தெரி­வின்­போது ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்­குள்­ளும் குழப்­பங்­கள் ஏற்­ப­டக்­கூ­டும். அதே­போல் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள்­ளும் குழப்­பங்­கள் குழப்­பங்­கள் ஏற்­ப­டக்­கூ­டும்.

இதைக் கருத்­தில்­கொண்டு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் அரச தலை­வர் வேட்­பா­ளர் ராஜ­பக்­ச­வின் குடும்­பத்­தி­லி­ருந்தே தெரிவு செய்­யப்­ப­டு­வார். அவர் யார் என்று இப்­போ­தைக்­குக் கூற மாட்­டோம். அவ­ரின் பெய­ரைப் பொருத்­த­மான நேரத்­தில் அறி­விப்­போம்.

வேட்­பா­ள­ரின் பெயரை இப்­போதே அறி­வித்­தால் வீண் பிரச்­சி­னை­கள் எழக்­கூ­டும். சில பேர் இந்த விவ­கா­ரத்தை சுய­நல அர­சி­யல் பரப்­பு­ரைக்­குப் பயன்­ப­டுத்­தக்­கூ­டும். இப்­போ­தைக்கு நாம் அமை­தி­யாக இருப்­பதே சிறந்­தது.
அரச தலை­வர் தேர்­தல் வேட்­பா­ளர் விவ­கா­ரத்­தில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பங்­கா­ளிக் கட்­சி­யா­கக் கொண்­டுள்ள ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்­குள் குழப்­பம் ஏற்­பட்­டால் ராஜ­பக்ச குடும்­பத்­தைச் சேர்ந்த அரச தலை­வர் வேட்­பா­ளர் தாமரை மொட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யி­டு­வார்.

தாமரை மொட்­டுச் சின்­னத்தை தன்­ன­கத்தே கொண்­டுள்ள சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் மாபெ­ரும் வெற்­றி­யீட்­டி­யமை எல்­லோ­ருக்­கும் தெரிந்த விட­யம். இந்­தக் கட்சி எதிர்­கா­லத்­தில் எமது நிரந்­தர கட்­சி­யா­கக்­கூ­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


No comments

Powered by Blogger.