புதிய அர­ச­மைப்பை மறுத்துள்ளது அஸ்­கி­ரிய பீடம்!!

புதிய அர­ச­மைப்­புத் தேவை­யற்­றது என்று, இலங்­கை­யின் முக்­கிய பௌத்த பீட­மான அஸ்­கி­ரிய பீடத்­தின் அநு­நா­யக்க தேரர் நேற்­றுத் தெரி­வித்­துள்­ளார்.

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­ யின் தவி­சா­ளர் பேரா­சி­ரி­யர் ஜி.எல்.பீரிஸ், அஸ்­கி­ரிய பீட அநு­நா­யக்க தேரரை நேற்று மாலை சந்­தித்­தார். இந்­தச் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அஸ்­கி­ரிய பீடம் என்ற வகை­யில், நாங்­கள் ஆரம்­பத்­தி­லி­ருந்து புதிய அர­ச­மைப்பு அத்­தி­யா­வ­சி­ய­மற்­றது என்று கூறி­னோம். மகா­நா­யக்க தேரர்­க­ளும் அதனை வலி­யு­றுத்­தி­னர்.

சம­கால அரசு மகா­நா­யக்க தேரர்­க­ளைக் கண்­டு­கொள்­வ­தில்லை. இது யாரு­டைய தேவைக்­கேற்ப வந்­தது என்­பது பிரச்­சி­னைக்­கு­ரி­யது. நாடா­ளு­மன்­றத்­தில் பொது நிலைப்­பாடு ஒன்றை பெற முடி­யாது. புதிய அர­ச­மைப்பு ஒரு­போ­தும் தேவை­யற்­றது.

மாகாண சபை­களை கலைப்­பதை தவிர தேர்­தல் நடத்­து­வ­தற்கு எது­வித தேவை­யும் இல்லை. பொது மக்­க­ளுக்கு தீர்­மா­ன­மெ­டுக்­கும் சந்­தர்ப்­பத்தை தேர்­தல் ஊடாக வழங்க வேண்­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.