வெற்றி மோடியால் அல்ல அமைப்பால்தான்: இறங்கி வந்த மோடி


மோடியை மிஞ்சிய உலகத் தலைவர் இல்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பேசிய நிலையில், நேற்று அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நான் ஒரு பிரதம சேவக்” என்று பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளரை மாற்ற இருப்பதாக ஆலோசனை செய்துகொண்டிருக்கிறது என்றி தகவல்கள் வெளிவரும் நிலையில்தான் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் ஜனவரி 11, 12 தேதிகளில் டெல்லியில் நடந்தது. ஏற்கனவே ஆர்.எஸ். எஸ்.சின் சென்னை கூட்டத்தில் கலந்துகொண்டு டெல்லி திரும்பிய பாஜக தலைவர் அமித் ஷா, 11 ஆம் தேதி இந்தக் கூட்டத்தில் பேசும்போது வழக்கத்துக்கு மாறாக மோடியை வெகுவாகப் புகழ்ந்தார். கட்சி என்பதைவிட மோடி என்ற பிம்பத்தையே முன்னிறுத்தினார். இதை நன்றாக உணர்ந்துகொண்ட மோடி, நேற்று தன் பேச்சில் ஆர் எஸ் எஸ் இயகக்த்தை மீறி தான் செல்பவன் அல்ல என்பதை வெளிப்படுத்தினார், 80 நிமிடங்கள் முழுக்க முழுக்க இந்தியிலேயே பேசிய மோடி நாம் உறுதியான அரசை நடத்தி வருகிறோம், சிலர் சுயநல நோக்குடன் ஊழல் செய்வதற்கான அரசை அமைக்க ஒன்று சேர்ந்து வருகிறார்கள். இந்த மகா கட்பந்தன் எல்லாம் ஏற்கனவே சோதிக்கப்பட்டு தோற்றவைதான். 2007 ல் பேசிய காங்கிரஸ் அமைச்சர் ஒருவர், மோடி இன்னும் சில மாதங்களில் சிறைக்குப் போகப் போகிறார் என்று சொன்னார். ஆனால் நடந்தது என்ன? நான் ஒன்றும் குஜராத் மாநிலத்துக்குள் சிபிஐ வரக் கூடாது என்று தடை போட்டவன் அல்ல என்று பேசிய மோடி அடுத்த பேசியதுதான் முக்கியமானது. “நாம் கடந்த நான்கரை ஆண்டுகளில் பெற்ற வெற்றி என்பது மோடியின் வெற்றி அல்ல. இந்த இயக்கத்தின் வெற்றி, இந்த அமைப்பின் வெற்றி. நான் எல்லா சவால்களையும் சந்தித்து வெற்றிபெற்றுவிட்டேன் என்று பெருமைப்பட விரும்பவில்லை. நேர்மையாக, உண்மையாக, அர்ப்பணிப்புடன் கூடிய கடுமையாக உழைத்துவரும் பிரதம சேவக் தான் நான். மோடி என்ற தனி மனிதனால் எதுவும் ஆகவில்லை. எல்லாம் இயகக்த்தின் வெற்றி” என்றார் மோடி. சேவக் என்றால் சேவகர் என்று பொருள். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்.சில் சேவக் என்ற பதமே பெரும்பாலும் பயன்படுத்தப்படும். அதைக் குறிப்பிட்டு மோடி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.