சரி­யான குதிரை களத்­தி­லி­றங்­கும்

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி, பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சி­கள் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பொது வேட்­பா­ளர் ஒரு­வ­ரைத் தெரிவு செய்­வ­தில் இரு­வேறு நிலைப்­பா­டுக­ளில் இருக்­கின்­றன. இந்­தப் பிரச்­சி­னை­களை அவர்­க­ளால் தீர்த்­துக்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் அரச தலை­வர் தேர்­த­லுக்­காக ஐக்­கிய தேசி­யக் கட்சி சரி­யான குதி­ரை­யைக் கள­மி­றக்கி வெற்றி பெறும்.


இவ்­வாறு கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்­சர் வசந்த அலு­வி­ஹார தெரி­வித்­துள்­ளார்.

மாத்­தளை – கலே­வல பிர­தே­சத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்­றில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.
அவர் தெரி­வித்­தா­வது-

கடந்த இரு மாத­கா­ல­மாக நாடு நிலை­யற்ற நிலை­யில் காணப்­பட்­டது. நாம் முன்­னெ­டுத்த அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்கு அரச தலை­வ­ரால் தடை­யேற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால் இடை­நி­றுத்­தப்­பட்ட அபி­வி­ருத்தி திட்­டங்­கள் தற்­போது விரை­வாக 2, 3 மடங்­கு­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன- என்­றார். 

No comments

Powered by Blogger.