மொழிப்பிரச்சினையை ஆராய குழு நியமிப்பு!! - வடக்கு ஆளுநர் அதிரடி!!

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்று, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரிரால் பணிக்கப்பட்டது.

அதற்கமைவாக அந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை, அந்த செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலேயே இந்த மொழிக் குழு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளது.

மொழிக் குழுவின் தலைவராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல், உறுப்பினர்களாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் முன்னாளர் அதிபர் எஸ்.பத்மநாதன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீஸன், யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் மொஹைதீன் ஹனி சேகு ராயீத்து, வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்(இரண்டாம் மொழி) திருமதி சுதர்ஷி பெர்னாண்டோ ஹப்புகொட்டுவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொழி கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, எழும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்தக் குழுவுக்கு அறிவித்து உரிய ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை தலைவர், மொழிக் குழு, ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, கண்டி வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கோ அல்லது 021 221 9374 என்ற தொலைநகல் இலக்கத்துக்கோ அனுப்பி வைக்க முடியும் என்று ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colomboNo comments

Powered by Blogger.