பருத்தித்துறையில்“தமிழினத்தின் நாய் காவலனே..! வருகவருக“வரவேற்ப்பு!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிற்கு அவரது ஆதரவாளர்களால் இன்று வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரில் இன்று மாலை 3.00 மணியளவில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ‘தமிழினத்தின் காவலனே… வருக வருக“ என பருத்தித்துறை நகரில் சுமந்திரனின் ஆதரவாளர்களால் பருத்தித்துறை நகரில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.


 அரசியல் நெருக்கடியின்போது ஜனநாயக முறையில் நாட்டை காப்பாற்றியதற்காக இந்த பாராட்டு விழாவை தமிழரசுக்கட்சியின் வடமராட்சி செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை பருத்தித்துறை நகரில் இருந்து மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

 அங்கிருந்து கொட்டடி பிள்ளையார் ஆலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, வரவேற்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.


 வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், பருத்தித்துறை நகரசபை, பிரதேசசபையின் தலைவர்கள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.