இயற்கை சீற்றத்தால், 1,400 பேர் பலி


கடந்த ஆண்டு, நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், 1,428 பேர் பலியாகியிருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம், புயல், மண் சரிவு, புழுதி புயல், கடும் வெயில், உறைபனி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், 2018ம் ஆண்டு, நாடு முழுவதும், 1,428 பேர் பலியானதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக, உத்தர பிரேதசத்தில், 590 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தில், 223 பேர் பலியாகினர். தித்லி மற்றும் கஜா புயலால், 122 பேர் பலியாகியுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.