ஷில்பா' விஜய்சேதுபதியுடன் டூயட் ஆடும் டிக்டாக்வாசிகள்!
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி, அந்த கெட்அப்பில் நடனமாடும் வீடியோ வெளியானதை அடுத்து, அவருடன் டூயட் ஆடும் டிக்டாக் வீடியோக்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிற்கும் புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி வைரலானது. அப்போது முதல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நலன் குமாரசாமி, நீலன் கே சேகர், மிஸ்கின் என்ற ஸ்டார் காம்போ, இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளது. ரம்யாகிருஷ்ணன், 'பக்ஸ்' பகவதி பெருமாள் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை