அர­சுக்கு மகிந்த எச்­ச­ரிக்கை!

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­களை ரணில் அரசு உடன் கைவிட வேண்­டும். இல்­லை­யேல் அதற்கு எதி­ராக நாட்டை முடக்கி மாபெ­ரும் போராட்­டங்­களை முன்­னெ­டுப்­போம்.
இவ்­வாறு அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்தராஜ­பக்ச.

‘மகா­நா­யக்க தேரர்­க­ளின் அறி­வு­ரை­களை இந்த அரசு உதா­சீ­னம் செய்­கின்­றது’ என­வும் அவர் குற்­றம்­சாட்­டி­னார்.

இது தொடர்­பில் நேற்று அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அவ­ச­ரப்­பட்டு புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வரு­வ­தில் இந்த அரசு உறு­தி­யா­க­வுள்­ளது. இதில் எமக்கு பலத்த சந்­தே­கங்­கள் உள்­ளன. நாட்­டின் பொரு­ளா­தா­ரம் அதாள பாதா­ளத்­தைச் சென்­ற­டை­கின்­றது. முத­லில் அதை உயர்த்த வேண்­டும். அதை­வி­டுத்து அர்த்­த­மற்ற புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வரு­வ­தில் எவ்­வித பய­னும் இல்லை.
முத­லில் புதிய அர­ச­மைப்பு பணியை அரசு கைவிட வேண்­டும். இல்­லை­யேல் நாட­ளா­விய ரீதி­யில் மாபெ­ரும் போராட்­டங்­கள் வெடிக்­கும். மக்­க­ளைத் திரட்டி அர­சுக்கு எதி­ராக இந்­தப் போராட்­டங்­களை நாம் முன்­னெ­டுப்­போம்.

நாட்­டைத் துண்­டாக்க நாம் ஒரு­போ­தும் இட­ம­ளி­யோம். நாட்­டைப் பாது­காக்க இரா­ணு­வத்­தி­னர் சிந்­திய குருதி வீண்­போக விட­மாட்­டோம். புதிய அர­ச­மைப்பை தமிழ் மக்­கள் விரும்­ப­வில்லை. முஸ்­லிம் மக்­க­ளும் விரும்­ப­வில்லை. சிங்­கள மக்­க­ளும் அதை அடி­யோடு நிரா­க­ரிக்­கின்­றார்­கள்.

இந்­நி­லை­யில், எதற்­குப் புதிய அர­ச­மைப்பு? ரணில், சம்­பந்­தன் மற்­றும் சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரின் விருப்­பத்­துக்கு இணங்க நாட்­டின் அர­ச­மைப்பை மாற்­றி­ய­மைக்க முடி­யாது. முத­லில் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­குச் செல்­லு­மாறு இந்த அர­சுக்கு சவால் விடு­கின்­றேன். அதன் பின்­னர் ஆட்­சி­ய­மைக்­கும் அரசு புதிய அர­ச­மைப்பு தொடர்­பில் சிந்­திக்­கட்­டும் – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.