மகிந்­த­வின் குடும்­பத்­துக்­குள் வலுக்­கி­றது அதி­கார மோதல்!

அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­குத் தானும் தயார் என்று தெரி­வித்­தார் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் அம்­பாந்­தோட்டை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் சபா­நா­ய­க­ரு­மான சமல் ராஜ­பக்ச.

ராஜ­பக்ச சகோ­த­ரர்­க­ளில் மூத்­த­வ­ரான முன்னாள் சபா­நா­ய­கர் சமல் ராஜ­பக்ச, நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘மக்­கள் தயார் என்­றால், அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டத் தயா­ராக இருப்­ப­தாக கோத்­த­பாய ராஜ­பக்ச கூறி­யுள்­ளார். அரச தலை­வர் பத­விக்கு நான் பொருத்­த­மா­ன­வர் எனின், நானும் போட்­டி­யி­டு­வ­தற்­குத் தயா­ரா­கவே இருக்­கின்­றேன்’ என்று சமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

ராஜ­பக்ச குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வரே ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் வேட்­பா­ள­ராக அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வார் என்­றும், அவர் யார் என்­பதை இப்­போது வெளி­யிட முடி­யாது என­வும் சில நாள்­க­ளுக்கு முன்­ன­தாக, சமல் ராஜ­பக்ச தெரி­வித்­தி­ருந்­தார். இதற்­குப் பின்­னர், கோத்­த­பாய ராஜ­பக்ச, அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டத் தயார் என்று அறி­வித்­துள்­ளதை அடுத்து, சமல் ராஜ­பக்ச, தானும் தயா­ராக உள்­ளேன் தெரி­வித்­துள்­ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.