நிறுத்தப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை அமைப்பதற்கு சபையால் அனுமதி!

வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்று  நடைபெற்றது இதன்போது வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பு பகுதியில் தமிழகமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்க்கு சிலை அமைப்பதுதொடர்பாக வவுனியா நகரசபையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
அதற்கமைய சபையின் தவிசாளரால் உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் கே.ராஜலிங்கம் எம்.ஜி.ஆர் ஒரு  நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர், ஈழமக்களை எழுச்சியடைய செய்ததில் அவரது பங்கும் அளப்பரியது. இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகளிற்கு உரிய வசதிகளை செய்து கொடுத்தவர். அதனைவிட அவர் இலங்கையில் பிறந்து இந்தியாவில் புகழ்பெற்றவர், எனவே அந்த பெரியமனிதரை கௌரவிக்கும் விதமாக அவரது சிலையை அமைப்பதற்கு நகரசபை அனுமதி வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இதன்போது சிலை அமைப்பதற்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதன்போது பேசிய உறுப்பினர் செபநேசராணி வவுனியாவில் ஏற்கனவே இருக்கும் சிலைகளே சரியான முறையில் பராமரிக்கபடுவதில்லை எம். ஜி. ஆரைவிட தமிழர்களிற்காக போராடிய பல தலைவர்கள் இருக்கின்றனர். எனவே சிலை அமைக்கும் விடயத்தில் எனக்குஉடன்பாடில்லை என்று தெரிவித்தார். மற்றொரு உறுப்பினர் பா.ஜெவதனியும் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
எனினும் அனேகமான  உறுப்பினர்கள் சிலை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தமையால்  அனுமதி வழங்குவதாக தீர்மானம் எடுக்கபட்டிருந்தது. சிலை அமைப்பதற்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தபோது உறுப்பினர்கள். ராஜலிங்கம் மேசையைதட்டி தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த வாரம் தர்மலிங்கம் வீதிக்கு செல்லும் சந்தியில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டிருந்து. எனினும் உரிய அனுமதி இன்றி குறித்த பணிகள் இடம்பெறுவதாக தெரிவித்து நகரசபை மற்றும் பொலிசாரால் சிலை அமைக்கும் பணிகள் இடைநிறுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.