இறைமையை உறுதிப்படுத்தியவாறு புதுவருடத்தை வரவேற்கின்றமை வெற்றியாகும்: பிரதமர் ரணில்

சவால்களை முறியடித்து, இறைமையை உறுதிப்படுத்தியவாறு இந்த புதுவருடத்தை வரவேற்க கிடைத்தமை அனைவரும்
பெற்றுக்கொண்ட வெற்றியாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர், இன, மத, கட்சி பேதமின்றி ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்காக அணிதிரண்ட மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
அதிகார வெறி கொண்ட அரசியல் சூழ்நிலையில் கடுமையான சிரமங்கள் மத்தியில்கூட எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வருடங்களில் நாம் சமூக, அரசியல் சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்டோம். நாகரீகமான, நீதி நியாயம் மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட அந்த நடவடிக்கைகள் எமக்கு பலத்தினையும் துணிச்சலையும் வழங்கியதால் நாம் அரசியலமைப்புக்கு முரணான சூழ்ச்சியைத் தோல்விடையச் செய்தோம் என பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், பிறக்கின்ற வரும் சகல மக்களுக்கும் சவால் மிக்கதென்றும், ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்புண்டு எனவும் பிரதமர் கூறியுள்ளார். அதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.