விசுவமடு வங்கியில் தீவிபத்து!

கிளிநொச்சி- விசுவமடுப் பகுதியில் உள்ள இலங்கை வங்கி கிளையில், நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
வங்கியிலிருந்து இருந்து புகை வருவதனை அவதானித்த அயலில் உள்ள வர்த்தகர்கள் உடனடியாக, அது தொடர்பில் வங்கி ஊழியர்களுக்குத் தகவலை வழங்கினார். உடனடியாக தீ அணைப்பு சேவையின் உதவியும் நாடப்பட்டது.

விரைந்து சென்று தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், கிளையில் இருந்த கணனிகள் உள்ளிட்ட பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. காசு எண்ணும் இயந்திரத்தில் இருந்தே தீ பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
Powered by Blogger.