பிரியா பவானி சங்கர் வரிசையில் திவ்யா கணேஷ்

சின்னத்திரையிலிருந்து திரையுலகில் நுழைந்து புகழ் பெற்றவர்கள் பலருண்டு.
ஷாருக்கான், மாதவன் தொடங்கி பிரியா பவானி சங்கர் வரை இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர் சொந்த ஊர் இராமநாதபுரம். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். தோற்றம், நடிப்புத் திறமை என ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.
இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தியும் கொண்ட பெண்ணாக அந்தப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார்.
அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ். பெரிய திரைக்கு வந்து மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும் திவ்யா கணேஷ், புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதிக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே திவ்யாவின் கனவு.

No comments

Powered by Blogger.