எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கு இணையான சம்பளம் கிடைக்காது - ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து
வருகிறார். சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘சினிமாவில் சம்பளத்தில் வித்தியாசங்கள் இருக்கு. `தரமணி’ ரிலீசுக்கு முன்பே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் எனக்கு நிறைய வந்தது. அந்த கதைகள்ல நான்தான் ஹீரோ.
ஆனா, சம்பளம் பற்றிப் பேசினால், ‘ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட். அதனால சம்பளம் அவ்ளோ கொடுக்க முடியாது’ன்னு சொல்வாங்க. இங்கே ஒரு பெண்ணா எவ்வளவு உழைத்தாலும் ஆணுக்கு இணையான சம்பளம் கிடைக்காது. 
இது ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை தருகிற துறை இல்லை. ஆனால், இப்போது கொஞ்சம் மாறிட்டு வருது. அந்த மாற்றம் மகிழ்ச்சியை தருகிறது’ என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.