2019ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் கோலாகலம்

அரியலூரில் 2019ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் வீரர்களின் ஆரவாரத்துடன் கோலாகலத்துடன் தொடங்கி உள்ளது.


அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகளும் வீரர்களும் பங்கேற்கின்றனர்.

சுமார் 500 காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். வாடிவாசலிலிருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை யாராலும் அடக்க முடியாதபோது, பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஆக்ரோஷத்துடன் வந்த காளைகளை அடக்கிக்காட்டிய வீரர்களுக்கும் வெள்ளி காசுகள், கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன. அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசாணை பிறக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.