சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வவுனியா கோதண்ட நொச்சிகுளத்தில் வசிக்கும் 60 மாணவர்களுக்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவையால்  கற்றல் 
உபகரணங்கள் வழங்கி  வைக்கப்பட்டன.
                வவுனியா மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையும் அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களும் செயலாற்றி வருகின்றன.அவ்வகையில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோதண்ட நொச்சிக்குளத்தில் கல்விகற்கும் தரம்1 தொடக்கம்  தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டன.
டென்மார்க்கில் வசிக்கும் வ.கௌசல்யா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தாரின் அனுசரனையுடன் இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இக்கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கோதண்ட நொச்சிக்குளம் முருகன் ஆலய பொருளாளர் திரு.இரத்தினசிங்கம் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில்    சர்வதேச இந்து இளைஞர் பேரவை இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார் ஆலோசகர் சிவ.திருக்கேதீஸ்பரன் பேரவையின் இலங்கை கிளைத்தலைவல் ஜெ. மயூரக்குருக்கள் பிரதேச சபை உறுப்பினர் க.கணேசலிங்கம் நகரசபை உறுப்பினர் செ.மதியழகன் சமூக செயற்பாட்டாளர் கோ.கேசவன் பல்கலைக்கழக மாணவன் p.உஜாந்தன் ஆகியோர் கலந்து கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

No comments

Powered by Blogger.