மன்னார் நகர சபையில்- பல தீர்மானங்கள் முன்மொழிவு

மன்னார் நகர சபையின் 11 ஆவது அமர்வில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சபை அமர்வு இன்று சபையின் ‘சபா’ மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. மன்னார் நகரத்தை அபிவிருத்திகளுடன் கூடிய வளமான அழகான நகரமாக மாற்றுவதற்கு, கு சபை உறுப்பினர்கள் அனைவருடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தவிசாளர் அமர்வில் கேட்டுக் கொண்டார். அதேவேளை மக்களினால் முன் வைக்கப்பட்ட மன்னார் மது விற்பனை நிலையம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் சபையின் முன்வைக்கப்பட்டன. குறித்த மது விற்பனை நிலையத்தில் தரமற்ற மதுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றமை, மது விற்பனை நிலையத்துக்கு முன் மது அருந்துகின்றமை, இதனால் போக்குவரத்து இடையூறுகள் உள்ளிட்ட விடயங்கள் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து மன்னார் நகர சபையின் நிபந்தனைகளுக்கு அமைய குறித்த மது விற்பனை நிலைச் செயற்பாடுகள் அமைய வேண்டும் அல்லது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சபையில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் மன்னார் நகர சபையில் பதிவு செய்யப்பட்ட முன் பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கும் சபையால் தீர்மானிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.