மைதானத்தினை அமைத்து தருமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு மைதானத்தினை அமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் பண்டாரிகுளம் விதீயை மறித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, மாணவர்கள் பாடசாலைக்கு உட்புறமாக பதாதைகளை ஏந்தியவாறு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இதன்போது தமது பாடசாலைக்கு ஒரு மைதானம் இல்லாத நிலையில் பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று விளையாட்டுக்கழகங்களினதும், நகரசபையினதும் மைதானத்தினை பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் சோர்வடைந்து வீதிகளிலேயே மயக்கமடையும் நிலை காணப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தமது பாடசாலைக்கு மைதானமொன்றினை பெற்றுத்தருமாறு அரசியல்வாதிகள் உட்பட ஜனாதிபதிக்கும் மகஜர் அனுப்பியபோதிலும், இதுவரை எவ்வித பலனும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள காணியைப்பெற நிதியுதவியை வழங்கி அரசும், அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை