தமிழினத்தின் ஒற்றுமையை சிதைக்கும் எந்த நடவடிக்கையையும் தமிழர்கள் அனுமதிக்க முடியாது.!

கனடிய மண்ணில் இத்தனை தமிழ் ஊடகங்கள் இருந்தாலும் எத்துணை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இது நாள் வரையில் எந்த தமிழ் ஊடகமும் இன்னொரு தமிழ் ஊடகத்தையோ தமிழ் ஊடகவியலாளரையோ இழிவு படுத்தி பகிரங்கமாக நிகழ்ச்சி செய்து மிரட்டி
விமர்சித்ததில்லை.

ஆனால் இப்பொழுது கனடாவுக்கு புதிதாக வந்த தமிழ்த் தேசியம் பேசும் ஊடகம் அப்படி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழினத்தின் ஒற்றுமையை சிதைக்கும் எந்த நடவடிக்கையையும் தமிழர்கள் அனுமதிக்க முடியாது.!

அவர்கள் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் மக்களுக்குள்...!

ஆனால் அரசோடு கூடி நின்றாலும் தாயக மக்களுக்கு சில நன்மைகளை செய்கிறார்கள் என்பதற்காகவும், அதில் பணியாற்றும் சில ஊடகவியலாளர்கள் இனஉணர்வு கொண்டவர்கள் என்பதாலும், ஏதோ ஒரு வழியில் ஏதேனும் நன்மை எம் மக்களுக்கு போய்ச்சேரட்டும் என்பதற்காகவும் கனடாவில் காலூன்றும் இந்த தமிழ் ஊடகத்தை விமர்சிப்பது கூடாது என்றும் சில விடயங்களை பேசாது அமைதியாக இருந்தால் அவர்கள் முக நூலில் அந்த ஊடகத்தை விமர்சித்தவர்களை எழுந்தமானமாக மிரட்டி விமர்சித்து இப்படி கீழ்த்தரமாக அடிப்போம் என பகிரங்கமாக நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள் என்றால் உண்மையில் இவர்களின் ஊடக பண்பின் தரம் என்ன என சிந்திக்க வேண்டியுள்ளது.

சகோதரத்துவதோடு தாழ்மையாக வேண்டுகின்றேன்.....

தயவு செய்து இது போன்ற மிரட்டல் கலாச்சாரத்தை கனடிய தமிழர்களுக்குள் தமிழ் ஊடகப்பரப்பில்   கொண்டு வராதீர்கள்!

 ஊடக சுதந்திரத்தை மதிக்கும் கனடிய மண்ணில் தமிழர்கள் நாம் இத்துணை இழிவாக தமிழ் எழுத்தாளர்களை அவமதித்து ஊடக சேவையை என்றுமே வழங்கவில்லை.

நிறுத்தி கொள்ளுங்கள் இந்த அடிப்பேன் குத்துவேன் என மிரட்டும் அநாகரீகப் பண்பற்ற செயலை!

விமர்சிப்பது மக்களின் உரிமை!

உங்கள் பதில்களை முக நூல்களில் பதிவிட்டோரின் பதிவுகளின் கீழ் நேரடியாக விவாதியுங்கள். ஒரு நிகழ்ச்சியையே இதற்காக தயாரித்து அடிப்போம் நாரி முறிப்போம் என  மிரட்டுவது மிக அநாகரீகச் செயல்...

தமிழினம் முன்னொரு பொழுதையும் விட இப்பொழுது ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய காலங்கள் இவை என்பதை புரிந்து தயவு செய்து பண்பாக மக்களோடு நடவுங்கள், தாயக மக்களின் விடுதலைக்காகவும் அவர்கள் துயர் தீர்க்கவும் பணிகளை தொடருங்கள்  என பணிவன்போடு வேண்டுகின்றேன்.

தேசியப்பணியை இதய சுத்தியோடு செய்கின்ற எவருமே இத்தகைய மிரட்டல்களை விடுத்து கருத்துக்களை எழுதுபவர்களை எச்சரிக்க மாட்டார்கள்.

இனஉணர்வோடு பயணிப்போம்! தமிழ் மக்களை காக்க அவர்கள் உரிமை மீட்க ஒற்றுமையை கையில் எடுப்போம்!

 விமர்சிக்கும் மக்களை தொடர்ந்தும் இவர்கள் மிரட்டுவார்கள் என்றால் மக்களால் இவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்பது உறுதி!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.