ஒரு வரு­டத்­தில் 9 உறுப்­பி­னர்­கள் -சபை­க­ளி­லி­ருந்து வில­கல்!!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு உறுப்­பி­னர்­க­ளா­கப் பத­வி­யேற்று ஒரு வருட காலப்­ப­கு­திக்­குள்­ளேயே 9 பேர் பதவி வில­கி­ யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­ கின்­றது.

இறப்பு, கட்­சி­கள் உறுப்­பு­ரி­மை­யில் இருந்து நீக்­கி­யமை, சில உறுப்­பி­னர்­க­ளின் நிய­ம­னம் தொடர்­பாக நீதி­மன்ற வழக்­கு­கள் இருக்­கின்­றமை என்­ப­னவே இதற்­குக் கார­ணங்­கள் என்று தெரி­விக்­கப் பட்­டது.
யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குத் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி சார்­பா­கத்

தெரி­வான சு.விஜ­ய­காந்த் மூன்று கூட்­டங்­க­ளுக்­குச் சமு­க­ம­ளிக்­கா­த­தால் அவ­ரது உறுப்­பு­ரிமை நீக்­கப்­பட்டு அவ­ரது இடத்­துக்கு வி.நர்­மதா உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். நெடுந்­தீ­வுப் பிர­தேச சபைக்­குத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பா­கத் தெரி­வான ச.லோகேஸ்­வ­ரன் இறந்­து­விட்­டார். அவ­ரது இடத்­துக்கு ந.பர­மேஸ்­வரி நிய­மிக்­கப்­பட்­டு­ள­ளார்.

வல்­வெட்­டித்­துறை நக­ர­ச­பைக்­குத் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி சார்­பா­கத் தெரி­வான சி.நவ­கோடி பத­வி­யி­லி­ருந்து தானாக வில­கி­விட்­டார். அவ­ரது இடத்­துக்கு த.சதா­சி­வம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பா­கத் தெரிவு செய்­யப்­பட்ட ஜி.பிர­காஷ் அவ­ரது கட்­சி­யின் செய­லா­ளர் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யி­ருந்­தார். அவ­ரது இடத்­துக்கு அ.தவப்­பி­ர­கா­சம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இதே பிர­தேச சபைக்­குத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பா­கத் தெரி­வா­கிய இ.குமா­ர­சாமி இறந்­து­விட்­டார். அவ­ரது இடத்­துக்கு இ.கங்­கா­த­ரன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

வலி.கிழக்­குப் பிர­தேச சபைக்­குத் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி சார்­பா­கத் தெரி­வான ச.பிர­தீ­பன் தானா­கப் பதவி வில­கி­னார். அவ­ரது இடத்­துக்கு இ.மயில்­வா­க­னம் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். மேற்­கு­றிப்­பிட்ட 6 உறுப்­பி­னர்­க­ளின் பதவி வில­கல் மற்­றும் நிய­ம­ னங்­கள் அர­சி­த­ழில் பிர­சு­ரிக்­கப்­பட் டுள்­ளன.

மூன்று உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்­க­ளின் பதவி வில­கல் கிடைத்­துள் ளன என்­ற­போ­தும் அவர்­க­ளின் விவ­ரங்­கள் அர­சி­த­ழில் பிர­சு­ரிக்­கப் பட­வில்லை. இதற்­குக் கார­ணம் சில­ரின் வழக்­கு­கள் அண்­மை­யில் முடி­வ­டைந்­த­மை­யா­லும் சில வழக்­கு­கள் தொடர்ந்து நடை­பெ­று­கி்ன்­ற­மை­யுமே என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.