வெனிசுலா அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்தது !

அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவை வெனிசுலா முறித்துக் கொண்டுள்ளது. அதன்படி அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டைவிட்டு வெளியேற 72 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பை வெனிசுலா ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.

இடைக்கால ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோ, இதனை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் உள்ளிட்ட சர்வதேச அரசாங்கங்கள் வரவேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கெய்டோவிற்கு அமெரிக்கா ஆதரவை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, இராஜதந்திர உறவை முறித்துக் கொள்வது தொடர்பான ஒருதலைப்பட்ச முடிவை மதுரோ அறிவித்துள்ளார்.

வெனிசுலாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலை புறக்கணித்தமையால், அங்கு 46.1 வீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

இதனால், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நிக்கோலஸ் மதுரோ 58 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.

எனினும், இவரது வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, நிக்கோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தியும், புதிய தேர்தலை நடத்தக் கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இடைக்கால ஜனாதிபதி என்ற கெய்டோவின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.