இன்று மலேசியாவின் புதிய மன்னர் யார் என்பது குறித்த அறிவிப்பு!!

மலேசியாவின் புதிய மன்னர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவின் 15ஆவது மன்னராகப் பொறுப்பேற்றிருந்த கிளந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகமது அண்மையில் பதவி விலகினார்.

மலேசியாவின் 9 மாநிலங்களைச் சேர்ந்த சுல்தான்கள், சுழற்சி அடிப்படையில் மன்னராகப் பொறுப்பேற்பது வழக்கம். இதற்கமைய அடுத்து அரியணையேறும் வாய்ப்பு பாஹாங் மாநில சுல்தானுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் 88 வயதான சுல்தான் அஹமட் ஷா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ், புதிய மன்னர் உடல்நலம், மனநலத்துடன் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாகும்.

எனவே, பஹாங் சுல்தான் அஹமட் ஷா பதவி விலகி, அவரது மூத்த மகன் பாஹாங் துங்கு அப்துல்லா (Pahang Tengku Abdullah) அங்கு பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னரே அவர் மலேசியாவின் மன்னராகப் பதவியேற்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு பதவியேற்கும் மன்னர் ஐந்து வருடங்களுக்கு அரியணையில் இருப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.