மஹிந்த சுயரூபம் எவருக்கும் தெரியாது

உண்மையான மஹிந்த ராஜபக்ஷவினுடைய சுயரூபம் மறைக்கப்பட்ட பொய்யான ஒருவரே மக்கள் முன் காண்பிக்கப்படுகின்றார்.அதனையே மக்கள் நம்புகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


 எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவர் அல்ல. கடந்த காலங்களில் முதலாளித்துவக் கொள்கையினடிப்படையில் செயற்பட்ட ஒருவராவார்.

 சோசலிஷ மகளிர் சங்கத்தின் விசேட நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மக்கள் வாழ முடியாத பாரிய பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றன. நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்ற நோக்கத்தை விட எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதே தற்போதுள்ள பிரதான கட்சிகளுக்கு பெரும் போட்டியாகக் காணப்படுகின்றது.  

No comments

Powered by Blogger.