ஞானசாரரை விடுதலை செய்யுங்கள்

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்புக்களிலும் இருந்து எழுந்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, பொதுமன்னிப்பு வழங்கி ஞானசாரரை விடுதலை செய்யும்படி புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் எழுத்து மூலமாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
  

No comments

Powered by Blogger.