மாலி தாக்குதலில் இலங்கை இராணுவத்தினர் உயிரிழப்பு

மாலியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.


ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்திற்கு தலைமைத் தாங்கிய ஒருவரும் மற்றுமொரு இராணுவ வீரருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருளைக்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடத்திய தாக்குதலில் இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு மேலும் மூன்று இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மாலியிலுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படைத்தலைமையகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.