ஜனநாயகத்தை மீறியவர்களே அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர் !

18 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக ஜனநாயகத்தை மீறியவர்களே தற்பொழுது, நீதித்துறையையும் ஜனநாயகத்தையும் விமர்சித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் விவாதமொன்றுக்கும் செல்லத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு என்ன நடந்தது என எம் அனைவருக்கும் தெரியும். 17 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் கொண்டுவந்தோம்.

ஆனால், மஹிந்த அரசாங்கம் 18 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவந்தது. அனைத்தையும் மாற்ற முயற்சித்தார்கள். இதன் விளைவாகவே மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தோல்வியடைந்தார்.

தற்போது உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து வருகிறார்கள். யார் இதற்கெல்லாம் காரணம்? ஜனநாயகத்தை மீறியவர் யார்?அனைத்துக் குற்றங்களையும் செய்துவிட்டு நீதித்துறையையும் சட்டத்தரணிகளையும் விமர்சிப்பதில் என்ன பயன்? இதற்கு நாம் இடமளிக்க முடியாது. அரசியலமைப்புச் சபையினாலேயே நியமனங்கள் அனைத்தும் சுயாதீனமாக வழங்கப்பட்டுள்ளன“ என்று பிரதமர்  மேலும் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.