ஜாக்டோ- ஜியோ போராட்டம்: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு!

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அறிவித்த நிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடந்த இரு தினங்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நிராகரித்தனர். இதற்கிடையே, ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் (25ம் தேதி) பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்த நிலையில், மாணவர்களின் நலனுக்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இன்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.