என்.ஜி.கே, காப்பான் படங்களுக்கு பிறகு சூர்யா நடிக்கும் புதிய படம்

காப்பான் படத்திற்கு பிறகு  சுதா கொங்காரா இயக்கும் படத்தை 2டி புரொடக்‌ஷனில் நடிக்க இருக்கிறார் நடிகர் சூர்யா.


செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது என்ஜிகே படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யாவுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இதனை அடுத்து நடிகர் சூர்யா இறுதிச் சுற்று இயக்குநர் சுதா  கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் இந்தியாவின் சண்டிகர், அமெரிக்கா ஆகிய இடங்களில் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்த படத்தை சூர்யாவே தனது 2டி புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கவிருக்கிறார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.