நியூசிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு: ரோகித் கேப்டனாகிறார்

நியூசிலாந்து தொடரின் கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்து-இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி இல்லாததால் துணை கேப்டனாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட இருக்கிறார்.  

No comments

Powered by Blogger.