யாழில் போதை ஏத்த வரு­கி­றாராம் மைத்­திரி

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் முன்­னெ­டுக்­கத் திட்­ட­மி­டப் ­ப­டும் கிராம சக்தி வேலைத் திட்­டங்­கள் தொடர்­பில் நேரில் ஆரா­யும் நோக்­கில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பெப்ரவரி6ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் வர­வுள்­ளார்.


ஒவ்­வொரு பிர­தேச செய­லர் பிரி­வி­லும் 3 கிரா­மங்­க­ளைத் தேர்வு செய்து அந்­தக் கிரா­மங்­க­ளுக்­கான வளர்ச்­சித் திட்­டங்­களை மேற்­கொள்­ளும் வகை­யில் அரச தலை­வ­ரால் கிரா­ம­சக்தி நிகழ்ச்சி திட்­ட­மி­டப்­பட்­டது. இதற்­காக தேர்வு செய்­யப்­பட்ட கிரா­மங்­க­ளில் முன்­னெ­டுக்க வேண்­டிய பணி­கள் தொடர்­பில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு பரிந்­து­ரைக்­கப்­பட்ட திட்­டங்­கள் தொடர்­பில் நேரில் ஆரா­யும் நோக்­கில் யாழ். மாவட்­டத்தை உள்­ள­டக்­கிய வகை­யில் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல் மாவட்­டச் செய­ல­கத்­தில் அரச தலை­வர் தலை­மை­யில் எதிர்­வ­ரும் 6ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது. தெரி­வு­செய்­யப்­பட்ட கிரா­மங்­க­ளில் ஒரு கிரா­மத்­துக்­கும் அரச தலை­வர் நேரில்­சென்று பார்­வை­யி­ட­வுள்­ளார்.

No comments

Powered by Blogger.