வவுனியா நகரில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு!

போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் நகரில் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.பாடசாலை வாயிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் கண்டி வீதியூடாக பழைய பேருந்து நிலையம், வைத்தியசாலை சுற்றுவட்டம் சென்று ஹொவப்பொத்தான வீதியூடாக, பஜார் வீதி மணிக்கூட்டுகோபுரம் கண்டி வீதி வழியாக மீண்டும் பாடசாலையைச் சென்றடைந்தது.

பாடசாலை அதிபர் ரி. அமிர்தலிங்கம் தலைமையில் ஊர்வலம் இடம்பெற்றது.

மாணவர்கள் போதைக்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசோனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதை ஒழிப்பு வரத்தின் இறுதி நாள் நிகழ்வகள் பாடசாலை மட்டத்தில் இன்றுடன் நிறைவடைகிறது.

No comments

Powered by Blogger.