மகிந்தவுக்கு சம்பந்தன் பதில் என்ன?

புதிய அர­ச­மைப்­பின் ஊடாக மாகாண சபை­க­ளுக்கு – மக்­க­ளின் கைக­ளுக்கு அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டு­வ­தால் ஊழல், மோச­டி­கள் இடம்­பெற வாய்ப்­பில்லை. வளங்­கள் வீண்­வி­ர­யம் செய்­யப்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­களை அது குறைத்து விடும். நாட்­டின் நற்­பெ­யர் பாது­காக்­கப்­ப­டும். நாட்­டின் துரித வளர்ச்­சிக்கு அது வழி­ச­மைக்­கும். எனவே, மனச்­சாட்சி உள்­ள­வர்­கள் புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­கு­வார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.


‘நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மை­யைக் கைவி­டு­வ­தற்கு நான் இணங்­கு­கி­றேன். ஆனால், நாடா­ளு­மன்­றத்தை மலி­னப்­ப­டுத்தி மாகாண சபை­க­ளுக்­குக் கூடு­தல் அதி­கா­ரங்­களை வழங்­கும் வகை­யில் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்ள அர­ச­மைப்பை எதிர்க்­கின்­றேன்’ என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்­று­முன்­தி­னம் சிறப்பு ஊடக அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தார்.

இது தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டு­வ­தால் நாடு ஒன்­பது துண்­டு­க­ளா­கப் பிரி­யும் என்ற போலிப் பரப்­பு­ரையை மகிந்த ராஜ­பக்­ச­வும் அவ­ரின் சகாக்­க­ளும் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இந்த நாட்­டின் மீது – மக்­கள் மீது பற்று இருந்­தால் போலிப் பரப்­பு­ரையை அவர்­கள் உடன் கைவிட வேண்­டும்.

மத்­தி­யில் அதி­கா­ரங்­கள் குவிந்­தி­ருப்­ப­தால் வீண் பிரச்­சி­னை­கள் எழு­கின்­றன. மாகா­ணங்­க­ளுக்கு – மக்­க­ளின் கைக­ளுக்கு அவர்­க­ளின் நலன் சார்ந்த அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து கொடுப்­ப­தால் அந்த மாகா­ணங்­கள் மட்­டு­மன்றி முழு நாட்­டுக்­கும் நன்மை ஏற்­ப­டும். நாடு நல்ல பாதை­யில் பய­ணிக்க சந்­தர்ப்­பம் கிடைக்­கும். இதை அனை­வ­ரும் உண­ர­வேண்­டும்.

நாடா­ளு­மன்­றத்­தில் உள்ள அனைத்­துக் கட்­சி­க­ளி­ன­தும் இயன்­ற­ளவு ஒத்­து­ழைப்­பு­டன் ஓர் புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­றிக் கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. ஒரு­மித்த – பிரி­ப­டாத – பிரிக்க முடி­யாத நாட்­டுக்­குள்ளே ஒரு தீர்­வைக் காணக் கிடைத்­துள்ள இந்­தச் சந்­தர்ப்­பத்தை நாம் தவ­ற­வி­டக்­கூ­டாது.

மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான அணி­யி­னர் புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­க­வேண்­டும் எனக் கேட்­டுக்­கொள்­கின்­றேன் – என்­றார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.